வால்பாறை
வால்பாறை அருகே சிறுகுன்றா தேயிலை எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக பட்ட பகலில் காட்டுயானைகள்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் வேறு எஸ்டேட் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காட்டு யானைகள் கூட்டம் பல்வேறு எஸ்டேட் பகுதியில் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதால் இரவு நேரத்திலும், அதிகாலை நேரத்திலும் பணிக்கு செல்லும் தேயிலை தோட்ட பணியாளர்கள் தேயிலை தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.