மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

பேராவூரணியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் குறுகலான பூனைகுத்தி காட்டாறு உள்ளது. இந்த பாலத்தில் மழை காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் செல்வ விநாயகபுரம், ஆண்டவன் கோவில், இந்திராநகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு ஆகிய கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பாலம் வழியாக பேராவூரணிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது பாலத்தில் உள்ள சாலையில் ஆங்காங்கே கப்பிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பாலத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு