ஆவடி,
ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த மீனாட்சி (வயது37). இவர் அந்த பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள சீட்டுகளை நடத்தி வருகிறார். இவரிடம் ஆவடி ஆனந்தன் நகரை சேர்ந்த மகாலட்சுமி (34) என்பவர் ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.1 லட்சம் ஆகிய மூன்று சீட்டுகள் போட்டுள்ளார்.
மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு சீட்டு போட்ட மகாலட்சுமி அந்த சீட்டை எடுக்காமல் அந்த சீட்டிற்கான பணம் முழுவதையும் கட்டினார். சீட்டு முதிர்வு அடைந்த பின்னரும் அதற்கான பணத்தை கொடுக்காமல் மீனாட்சி ஏமாற்றி வந்தார். மகாலட்சுமி பலமுறை அவரிடம் பணத்தை கேட்டும் மீனாட்சி பல மாதங்களாக பணம் கொடுக்காமல் இருந்து வந்தார்.
பெண் கைது-காவல்
இதுகுறித்து மகாலட்சுமி ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மீனாட்சியை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.