மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தீக்குளித்து பெண் தற்கொலை

தூத்துக்குடியில் கணவரின் மதுகுடிக்கும் பழக்கத்தால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

ஸ்பிக்நகர்:

கணவரின் மதுகுடிக்கும் பழக்கத்தால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீயில் படுகாயமடைந்த அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மது பழக்கத்தால் பிரச்சினை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சம்மாள் (வயது 36). இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது.

சங்கருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தீக்குளிப்பு

மனைவி பலமுறை கண்டித்தும் சங்கர் மது பழக்கத்தை விட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சங்கர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன், மனைவிக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும் மனமுடைந்து காணப்பட்ட பிச்சம்மாள் வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டில் மற்றவர்கள் தூங்கி நிலையில், வீட்டிற்கு அருகில் பிச்சம்மாள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். உடல் முழுவதும் தீ பரவி நிலையில் அலறி துடித்தவாறு பிச்சம்மாள் வீட்டிற்குள் ஓடிவந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீ அவருடைய மகன் முத்துகிருஷ்ணன்(9) படுத்திருந்த பாயில் பட்டு தீப்பற்றியது. இதனால் அவர் மீது தீபட்டு எரிந்துள்ளது.

சாவு

இருவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து பலத்த காயங்களுடன் பிச்சம்மாள், முத்துகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் அவரது மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்