மாவட்ட செய்திகள்

இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை

திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கூத்தணி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். அவருடைய மகள் வினோதினி (வயது 26). வக்கீலான இவருக்கும், இளையான்குடி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் கண்ணன்(31) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வினோதினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பன்னீர்செல்வம் இளையான்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்