மாவட்ட செய்திகள்

ரூ.15 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணி; கலெக்டர் பார்வையிட்டார்

திருப்பத்தூரில் ரூ.15 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணியை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டார்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோடு சிவசக்தி நகரில் எதிரே உள்ள மிளகாசேரி ஏரி 49 ஏக்கரில் உள்ளது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியே செல்லமுடியாமல் சாலைகளில் வழிந்தும் குடியிருப்பு பகுதியிலும் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியே செல்ல சிறுபாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இதனை கலெக்டர் சிவன்அருள் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு தார்சாலையில் இருந்து எத்தனை அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது, கான்கிரீட் கலவை சரியான முறையில் கொட்டப்படுகிறதா? சிமெண்டு சரிவர பயன்படுத்தப்பட்டுள்ளதா? என கேட்டறிந்து, ஏரி கால்வாயில் இருந்து உபரிநீர் வெளியே செல்லும் பாதையை ஆய்வு செய்தார்.

இதேபோல் புதுப்பேட்டை ரோடு பகுதியில் கழிவுநீர் செல்ல ரூ.7 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணியையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அப்போது நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் திருலோகசந்தர், உதவி பொறியாளர் கலைச்செல்வி மணி ஆகியோர் உடனிருந்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை