மாவட்ட செய்திகள்

கல் அரைக்கும் தொழிற்சாலையில் தலையில் கல் விழுந்ததில் தொழிலாளி சாவு

கல் அரைக்கும் தொழிற்சாலையில் தலையில் கல் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 58). இவர், உத்திரமேரூர் ஒன்றியம் சிறுதாமூர் என்னும் ஊரில் உள்ள கல் அரைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தலையில் பெரிய கல் விழுந்துவிட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த குழந்தைவேலு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை சக தொழிலாளர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைவேலு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரோசையா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்