மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில் தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில் தொழிலாளி பலி

தினத்தந்தி

கோட்டைப்பட்டினம், ஜூலை.15-
கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் அபூபக்கர் (வயது 45). இவர் வலை பின்னும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு மீண்டும் கோட்டைப்பட்டினம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கோட்டைப்பட்டினம் கடைவீதியில் வந்தபோது முன்னே சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது