மாவட்ட செய்திகள்

ஆவடியில் மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆவடியில் மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தார்.

ஆவடி காமராஜர்நகர் புதுநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அவர் தன்னுடன் கட்டிட வேலை செய்யும் ஒருவருடன் பேசிக் கொண்டே ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். இந்த நிலையில், சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆவடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு