மாவட்ட செய்திகள்

உலககோப்பை கிரிக்கெட் சூதாட்டம் : 2 பேர் கைது

மும்பை அந்தேரி ஜே.பி. ரோடு பகுதியில் உள்ள சொசைட்டி கட்டிடத்தில் கிரிக்கெட் போட்டிக்கான சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

மும்பை,

போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இந்தியா-பங்களாதேஷ் இடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்-லைன் மூலம் சூதாட்டம் நடந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சாந்த் கிஷோர் கன்னா(வயது58), ருச்சித் அஸ்வின்(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 8 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் உள்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது