மாவட்ட செய்திகள்

சென்னையில் வாலிபர் கொலை, சேலம் கோர்ட்டில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் சரண்

சென்னையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கேபிள் டி.வி. ஆபரேட்டர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

சேலம்,

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவர் கடந்த 16-ந்தேதி அந்த பகுதியில் மர்ம ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தினேஷ் கொலை சம்பந்தமாக ஒருவர் சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் சரண் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30) என்றும், சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணியாற்றி வருவதாகவும் கூறினார். மேலும் தினேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரண் அடைவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையொட்டி ராஜேசை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது