மாவட்ட செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

பாலக்கோட்டில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் நக்கீரன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 250 நாள் வேலையும், தினக்கூலியாக ரூ.600-ம் வழங்க வேண்டும். கொரோனா கால நிவாரணமாக விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் ரூ.7.500 வழங்க வேண்டும்.

பாலக்கோடு டவுன் தீர்த்தகிரி நகரில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அண்ணா நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க குழாயை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது