செய்திகள்

கேரளாவின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு: உயரதிகாரிகளுடன் பினராயி விஜயன் ஆலோசனை

கேரளாவின் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழையை முன்னிட்டு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடைவிடாத தெடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பேக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலேசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டங்களில் மழை மற்றும் அணைகளுக்கு வரும் நீர்வரத்து, மீட்புப் பணிகளை தெடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 450 பேர் உயிரிழந்தனர். சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு