செய்திகள்

பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் - தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரினார்

பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் தொடர்பாக, அவர் தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், அத்வானிக்கு ஜோஷி எழுதியது போன்ற ஒரு கடிதம், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், பா.ஜனதா தலைமையை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. அது, தான் எழுதிய கடிதம் அல்ல என்று ஜோஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான் அத்வானிக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை. ஆகவே, இந்த கடிதத்தை எழுதியது யார்? சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது யார்? என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு