செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,834 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 50 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலியானோரின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 8,746 பேர் குணமடைந்துள்ளனர்.

முன்னதாக டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு