செய்திகள்

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான, ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக் கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பையும், தனக்கு எதிரான தேர்தல் வழக்கையும் ரத்து செய்யக்கோரி கனிமொழி எம்.பி. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. கனிமொழி தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர்மனுதாரர் சந்தானகுமார் பதில் மனு தாக் கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்