செய்திகள்

ஹவாய் தீவில் உள்ள எரிமலையில் சீற்றம்...

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஒரு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹவாய்,

அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டங்களில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது சீற்றமடைந்து எரிமலை குழம்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹவாயின் மிகப்பெரிய தீவில் உள்ள ஹூலயா எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ஏற்பட்ட சீற்றத்தால் கரும்புகையுடன் எரிமலை குழம்பு வெளியேறி வருகிறது.

இந்த எரிமலை சீற்றத்தால் அந்த தீவில் வசித்து வரும் மக்களுக்கு தற்போதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், மீட்பு நடவடிக்கைகளுக்காக மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றம் குறைந்தபட்சம் 1 மாதம் நீடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் தீவில் வசித்து வரும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டு இதே ஹூலயா எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தால் 700 வீடுகள் தீக்கிரையாகின. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்