செய்திகள்

கொடுங்கையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை கொடுங்கையூர் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது பிளாக்கில் உள்ள 131 முதல் 135வது பிளாக் வரை உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் குழாய் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் நேரில் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், குடிநீர் கேட்டும், குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்தும் நேற்று காலை கொடுங்கையூரில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி இப்பகுதிக்கு லாரிகள் மூலம் சீராக தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்