செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 20 ஆயிரத்துக்குள் அடங்கியது. ஆனால் நேற்று பரவல் திடீரென அதிகரித்து, தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.

காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 23 ஆயிரத்து 529 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 28,246- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 277- பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 224- ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,37,66,707- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,30,43,144 - ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,48,339- ஆக அதிகரித்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு