தேசிய செய்திகள்

விளம்பர நோக்கில் மனு: தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்கக்கோரிய வழக்கில் நீதிபதி கருத்து

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கோவின் இணையதளம் மூலம் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இத்தகைய சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும் என கேரளா ஐகோர்ட்டில் பீட்டர் மயலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், விளம்பர நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்ற நேரத்தை வீணக்கியதற்காக மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். 6 மாதத்திற்குள் ரூ. 1 லட்சத்தை செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்த தவறினால் வருவாய் மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவரது சொத்துக்களில் இருந்து அபராதத்தை வசூலித்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்