தேசிய செய்திகள்

பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளை மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது

பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் ஊடுருவி மாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி

தெற்கு டெல்லியில் கடந்த 6 ஆம் தேதி நடந்த பெண்கள் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று மாணவிகளிடம் அத்துமீறியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 இளைஞர்களை இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு