தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து

ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

விஜயவாடா,

கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான வாரிய தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்புக்கான மாநில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் தேர்வு பற்றிய இறுதி முடிவு எட்டப்படாத சூழல் காணப்பட்டது. இதுபற்றி மாநில கல்வி மந்திரி ஆடிமுலப்பு சுரேஷ் இன்று கூறும்பொழுது, ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகளை அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்