தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 12 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல்: கண்காணிப்பு தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 12 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து கண்காணிப்பு பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். #terriosts

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 12 பேர் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

சிறு சிறு குழுக்களாக பயங்கரவாதிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உள்ளதாகவும், பெரிய அளவில் தாக்குதலை முன்னெடுக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்