மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 13,165 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,28,642 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 9,011 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,46,881 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 346 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21,033 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,60,413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.