தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பா.ஜனதாவில் 15 துணை குழுக்கள்

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பா.ஜனதாவில் 15 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி,

டெல்லியில் நேற்று பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரியும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், ரவிசங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி, கிரண் ரிஜ்ஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் ராஜ்நாத் சிங் பேசிய போது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக 15 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த குழுக்களில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெறுவார்கள் என்றும், அவர்கள் மக்களிடம் சென்று பெறும் கருத்துகள் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு