மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,864- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச இதுவாகும். அதேபோல், கொரோனா பாதிப்பால் இன்று 87- பேர் உயிரிழந்தனர்.
மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 47 ஆயிரத்து 328- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 996- ஆக உயர்ந்துள்ளது.