தேசிய செய்திகள்

இமாசலபிரதேசத்தில் 19 பேர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்

இமாசலபிரதேசத்தில் 19 பேர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிம்லா,

இமாசலபிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜனதாவை சேர்ந்த 11 பேர், அதன் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவை சேர்ந்த 8 பேர் ஆகிய 19 பேரை 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து பாஜனதா அறிவித்து உள்ளது.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகனுக்கு தேர்தலில் சீட் வழங்காததால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏற்கனவே 14 பேர் நீக்கப்பட்டு இருந்தனர். அந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு