தேசிய செய்திகள்

காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள ராம்நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ராம்நகரில் உள்ள உத்தக் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த பேருந்து கோகர்மார் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேருக்கு மிகத் தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை உத்தம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம குறித்து ராம்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு