ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்து உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இன்று காலை 8:30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திஉள்ளது. பாகிஸ்தான் ராக்கெட்களை வீசியும், தானியங்கி இயந்திரங்களை கொண்டும் தாக்குதலை நடத்தியது.
இதில் ராணுவ அதிகாரி உள்பட மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் படுகாயம் அடைந்த இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துவிட்டனர். பாகிஸ்தானின் அடாவடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.