தேசிய செய்திகள்

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2,841 பேர் இந்திய வீரர்களாக தேர்வு- விளையாட்டுத்துறை மந்திரி

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2,841 பேர் இந்திய வீரர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை மந்திரி தகவல் .

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2,841 பேர் இந்திய வீரர்களாக தேர்வு- விளையாட்டுத்துறை மந்திரிபுதுடெல்லி,

இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன.

கேலோ இந்தியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் வெளிப்படையான தேர்வு மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இது குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 விளையாட்டுப் பிரிவுகளில் 2,841 வீரர்கள் இந்திய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு