தேசிய செய்திகள்

குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மணிப்புரி,

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு சகோதரிகள் உட்பட 3 சிறுமிகள் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புல்வதி (வயது 12), அவரது சகோதரி ஜம்வதி (வயது 10) மற்றும் அவர்களது தோழி குஷ்பு (வயது 9) ஆகிய மூவரும் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடிசைப் பகுதியில் வசித்து வந்தனர். வாழ்வாதாரத்திற்காக தங்கள் பெற்றோருடன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம், கிஷ்னி சாலையில் கழிவுகளை சேகரிக்க சென்ற சிறுமிகள், வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க முடிவு செய்தனர். சிறுமிகள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான நீரில் தவறி விழுந்தனர். சிறுமிகளுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர்.

பின்னர் சிறுமிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்