ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை போதை பொருள் கும்பலை சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 போதை பொருள் கடத்தல்காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து போதை பொருளான ஹெராயின் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 36 பாக்கெட்டுகளில் ஹெராயின் போதை பொருள் இருந்தது.