ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.
சோபியான் பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சில தினங்களில், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. போலீசார் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.