லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு 5 நாட்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குழைந்தைகளில் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சோக சம்பவத்துக்கு பாஜக அரசுதான் காரணம். அலட்சியமாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கையை அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
குழந்தைகளின் இறப்புக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.