தேசிய செய்திகள்

டெல்லியில் லேசான நிலநடுக்கம்- மக்கள் அச்சம்

டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்தனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று மாலை 5.45 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள், நில நடுக்கத்தால் அச்சம் அடைந்தனர்.

டெல்லி வாசிகள் பலரும் நில நடுக்கத்தை உணர முடிந்ததாக தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டனர். நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டதும், டுவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரின் நலனுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு