தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 35.15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்; மொத்த எண்ணிக்கை 39.49 கோடி

இந்தியாவில் 35.15 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 39.49 கோடியாக உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அவசரகால தேவைக்காக மத்திய அரசு அளித்த அனுமதியை தொடர்ந்து கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதன்பின்னர் 18 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அனுமதி அளித்தது.

கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக செய்தியில், நாடு முழுவதும் இன்று ஒரு நாளில் 35.15 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்த எண்ணிக்கை 39.49 கோடியாக உயர்ந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்