பல்லியா,
உத்தர பிரதேசத்தில் பல்லியா நகரில் சிவபிரகாஷ் பஸ்வான் என்ற தலித் இளைஞர் தன் மீது தாக்குதல் நடத்தினர் என சிலர் மீது போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
அவர்கள் துர்கேஷ் பாண்டே, அங்கேஷ் பாண்டே, ரித்தேஷ் மற்றும் தேஜ் நரைன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். முகநூலில் டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டு உள்ளனர் என்று அவர்கள் மீது எப்.ஐ.ஆர். ஒன்றும் போடப்பட்டு உள்ளது.
இவர்கள் 4 பேர் மீதும் இளைஞரை தாக்கிய வழக்கில் ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.