தேசிய செய்திகள்

நீர்வீழ்ச்சியில் குளித்த கல்லூரி மாணவிகள் 4 பேர் பலி

நீர்வீழ்ச்சியில் குளித்த கல்லூரி மாணவிகள் 4 பேர் பலியாகினர்.

மும்பை,

நவிமும்பை நெருல் பகுதியில் எஸ்.ஐ.இ.எஸ். கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் 9 மாணவ-மாணவிகள் நேற்று காலை கார்கர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. இருப்பினும் மாணவ-மாணவிகள் காலை 11 மணியளவில் பான்டவ்காடா மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில், மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த 4 மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 4 மாணவிகள் உடல்களை மீட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்