தேசிய செய்திகள்

பள்ளியில் ஆபாச நடனம் ஆடிய 4 ஆசிரியர்கள் இடைநீக்கம்

பள்ளியில் ஆபாச நடனம் ஆடிய 4 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் சேர்ந்து ஆபாசமாக நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் ஆசிரியர்கள் பள்ளியில் ஆபாசமாக நடனம் ஆடியது நிரூபணமானது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தனியார் பள்ளியின் முதல்வர் ஒருவர் 2 ஆசிரியைகளுடன் ஆபாசமாக குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றும் வெளியாகி மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு