தேசிய செய்திகள்

ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: மத்திய அரசு திட்டம்

ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு சுமார் 4 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்டது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இது செல்கிறது.

இந்த எல்லையில், ரூ.21 ஆயிரத்து 40 கோடி செலவில், போர் முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோதல் சமயத்தில் ராணுவத்தினரை விரைவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்ப வசதியாக இச்சாலைகள் போடப்படுகின்றன.

இதுபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி, ரூ.5 ஆயிரத்து 400 கோடி செலவில், 2,100 கி.மீ. நீளத்துக்கு உட்புற சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் போடப்பட உள்ளன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு