திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று புதிதாக 4,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 65 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 153 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 65,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.