மும்பை,
கும்பல் வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. பின்னர் அந்த வழக்கை பீகார் மாநில போலீசார் ரத்து செய்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் சமூக பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேரை அந்த பல்கலைக்கழகம் அதிரடியாக நீக்கி உள்ளது.