தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும்- கருத்து கணிப்பில் தகவல்

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் என கருத்து கணிப்பில் 60 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி

பிரியங்காவின் வருகையால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 52 சதவீதம் பேர் பிரியங்காவால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு பிரியங்காவால் பாதிப்பு ஏற்படும் என்று 32 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் 8 சதவீதம் பேர் எந்த பாதிப்பு ஏற்படாது என்று கூறி இருக்கிறார்கள்.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என 60 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 32 சதவீதம் பேர் தேவையில்லை என்றும் 8 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறி உள்ளனர்.

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதரோவிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது பற்றி கேட்கப்பட்டதற்கு அது பா.ஜனதாவுக்கு எதிராக அமைந்து விடும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்தது. சுமார் 71 சதவீதம் பேர் ராபர்ட் வதேராவிடம் விசாரிப்பதால் பிரியங்கா மீது அனுதாபம் பிறக்கும் என்று கூறி உள்ளனர்.

பிரியங்கா அரசியலுக்கு வந்து இருப்பது சரியான கால கட்டமா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் பிரியங்கா முன்னதாகவே அரசியலுக்கு வந்து இருக்கலாம் என்று கூறி உள்ளனர்.

பிரியங்கா, இந்திராகாந்தி போல் இருப்பது பலமா? பலவீனமா? என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் பலம் என்று பதில் அளித்துள்ளனர். இந்திரா காந்தி போன்றே பிரியங்காவின் செயல்பாடுகள் இருப்பதாக 44 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

ஆனால் இந்திராகாந்தி அளவுக்கு பிரியங்கா செயல்பட முடியாது என்றும் கணிசமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திரா காந்தியுடன் பிரியங்காவை ஒப்பிட முடியாது என்று 42 சதவீதம் தெரிவித்தனர்.

பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்றும் பொதுமக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் ராகுல்காந்தியால் மக்களை கவர இயலவில்லை. எனவே பிரியங்கா வந்துள்ளார் என்று கூறி உள்ளனர்.

ராகுல் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாததால் தான் பிரியங்கா அரசியல் பிரவேசம் செய்து இருப்பதாக 50 சதவீதம் பேர் கூறி உள்ளனர். பிரியங்காவுக்கு பதவி கொடுத்து இருப்பதும் இதனால்தான் என்று கூறியுள்ளனர்.

ஆனால் 46 சதவீதம் பேர் பிரியங்கா நேரு குடும்பத்தின் வாரிசு. எனவே அவர் அரசியலுக்கு வருவது தவறு இல்லை அந்த அடிப்படையில்தான் அவர் அரசியலுக்கு வந்து இருப்பதாக கூறி உள்ளனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்