தேசிய செய்திகள்

கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 64- ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் பத்தினம் திட்டாவை சேர்ந்தவர்கள். 2 பேர் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் நாளை மறுநாள் முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தியேட்டர்களில் இரவு 10 மணிக்கு மேல் படங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்