தேசிய செய்திகள்

கஜகஸ்தான் நாட்டில் இருந்து 7.5 லட்சம் சுவாசக் கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு

கஜகஸ்தான் நாட்டில் இருந்து ரெஸ்பிரேட்டர் எனப்படும் சுவாசக் கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில் இருந்து, இன்று அதிகாலை விமானம் மூலமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரெஸ்பிரேட்டர் எனப்படும் சுவாசக்கருவிகள் மற்றும் 105 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கஜகஸ்தானில் இருந்து நேற்றைய தினம் 56 லட்சம் சுவாசக்கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு