டேராடூன்,
உத்தரகாண்டில் கிராமம் ஒன்றில் தனது பெற்றோருடன் வீட்டில் 11 வயது சிறுமி படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளாள். இந்த நிலையில் அங்கு வந்த 4 பேர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
அதன்பின் சிறுமியை அங்கிருந்து கடத்தி வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறுமியை கற்பழித்து பின்னர் கொலை செய்தனர். சிறுமியின் உடலை பாலம் ஒன்றின் மீது போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பகுதியில் கூலி தொழிலாளர்களாக உள்ள சந்தேகத்திற்குரிய 4 பேரை கைது செய்து உள்ளனர்.
கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய நிர்வாகத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோர் வந்து சமரசப்படுத்தி அவர்களை கலைந்து செல்ல செய்தன்ர்.