திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில், இன்று மாலை 5.55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாமில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.