கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வினியோகித்து வருகிறது.
அந்த வகையில் இதுவரையில் 64.65 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வினியோகித்துள்ளது. பயன்படுத்தியது போக இன்னும் 4 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 30 தடுப்பூசிகள், மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பாக உள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.