திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தோமாலா சேவை நடக்கிறது. அதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்கள். தோமாலா சேவையை பக்தர்கள் சிலர் இணையதளத்தில், தோமஸ் சேவா எனத் தவறாக பதிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.