தேசிய செய்திகள்

வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்துவருகிறது. இதில் சில பகுதிகளில் பஸ்களுக்கு தீவைப்பு, கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை